/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனைக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்
/
பனைக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்
ADDED : ஆக 25, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை வளர்ப்போர் சங்கத் தலைவர் செய்குல் அக்பர் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய தலைவர் விஜயலிங்கம் கால்நடை வளர்ப்பு குறித்தும், கால்நடைகளுக்கு ஏற்படும் பருவ கால தொற்றுகள் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், எடுத்துரைத்தார்.
சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க செயலாளர் மகாதீர் முகமது செய்திருந்தார்.