ADDED : செப் 27, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
கமுதி: -
கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.
மாணவிகள்,கமுதி லயன்ஸ் கிளப் இணைந்து கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. பரமக்குடி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். முதல்வர் சிந்துமதி முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் கனகசண்முகம்மாள் வரவேற்றார். ரேபிஸ் வெறிநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்பு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. லயன்ஸ் கிளப் தலைவர் சண்முகராஜ் பாண்டியன்,செயலாளர் ஆறுமுகம்,கால்நடை டாக்டர் இம்ரான் பங்கேற்றனர்.
