தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கால்நடை மருத்துவமனைகள் பெயரளவில் பராமரிப்பு பணி

 கால்நடை மருத்துவமனைகள் பெயரளவில் பராமரிப்பு பணி

 கால்நடை மருத்துவமனைகள் பெயரளவில் பராமரிப்பு பணி


ADDED : ஏப் 17, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கல்: சிக்கல் மற்றும் திருப்புல்லாணியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்பு பெயரளவில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.

திருப்புல்லாணி அரசு கால்நடை மருத்துவமனை 2017ல் கட்டப்பட்டதாகும்.

இங்குள்ள கட்டுமானப் பணி தரைமற்று இருந்ததால் கூரை பூச்சுக்கள் மற்றும் தரைத்தளங்கள் பக்கவாட்டு துாண்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில் திருப்புல்லாணி அரசு கால்நடை மருத்துவமனையின் முகப்பு பகுதியில் மட்டும் பெயரளவில் பெயின்ட் அடித்துள்ளனர். இதே போன்று சிக்கலில் இயங்கி வரும் அரசு கால்நடை மருத்துவமனையில் பராமரிப்பற்ற கட்டடத்திலும் முகப்பு பகுதியில் மட்டும் வண்ணம் பூசி வைத்துள்ளனர். மற்ற பகுதிகள் அனைத்தும் பராமரிப்பின்றி உள்ளது. எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க முழுவதுமாக கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us