UPDATED : அக் 09, 2026 12:29 AM
ADDED : அக் 09, 2026 12:26 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கையகம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. கால்நடை உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். உதவி டாக்டர்கள் திருச்செல்வி, முகமது அப்ரின் முன்னிலை வகித்தனர்.
கால் நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம், உடல் பரிசோதனை, அறுவை சிகிச்சை, கால்காணை, வாய்காணை உட்பட பல்வேறு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர். சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
