தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வயாகரா மாத்திரைகள் பறிமுதல்

 வயாகரா மாத்திரைகள் பறிமுதல்

 வயாகரா மாத்திரைகள் பறிமுதல்


ADDED : மார் 04, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 07:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.பல லட்சம் மதிப்புள்ள வயாகரா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் நேற்றிரவு கியூ பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னந்தோப்பில் பார்சல்கள் இருந்தன. அதனை கியூ பிரிவு போலீசார் சோதனையிட்டத்தில் 342 சோப், 22,400 வலி நிவாரணி மாத்திரைகள், 360 வாசனை ஸ்பிரே, 4800 வயாகரா மாத்திரைகள் உள்ளிட்ட அழகுசாதன கிரீம்கள் மற்றும் படகில் பொருத்தக்கூடிய 2 இன்ஜின்கள் இருந்தன.

இதனை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதனை பைபர் கிளாஸ் படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாபியா கும்பல் கைவரிசை: இந்த மாத்திரைகளை தமிழகத்தில் உள்ள மருந்து கடைகளில் வாங்காமல் இமாச்சல்பிரதேசத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் ஆலையில் பார்மசி படித்தவர் பெயரில் போதை பொருள் கடத்தும் மாபியா கும்பல்கள் வாங்கி இலங்கைக்கு கடத்துகின்றனர். இந்த மாபியா கும்பலின் நெட்வொர்க் குறித்து மத்திய, மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us