/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி துணை ஜனாதிபதி, முதல்வர் வருகை 5000 போலீசார் பாதுகாப்பு; ட்ரோன் பறக்கவிட தடை

ADDED : அக் 29, 2025 02:39 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை(அக்.,30) நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கின்றனர். ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் காலை 9:30 மணிக்கு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.
அதைத்தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 10:00 மணிக்கு பசும்பொன் வருகிறார்.
11:00 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு 11:15 மணிக்கு மதுரை திரும்புகிறார்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர், நிர்வாகிகள் மரியாதை செலுத்த காலை 10:00 மாலை 5:00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர், துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்டத்தில் பி.என்.எஸ்.எஸ்., 163 (144 தடை) பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்ட போலீசார் உட்பட 5000 பேர் ஈடுபட்டுள்ளனர். நினைவிடம் பகுதிக்கு இன்றும், நாளையும் (அக்.29, 30) டூவீலர்கள், வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதை மீறி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக ராமநாதபுரம், சிவகங்கையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பசும்பொன் பகுதியை சுற்றிலும்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் நாளை (அக்.,30) ட்ரோன்கள் பறக்கவிட தடைவிதித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.