/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அக்.30ல் துணை ஜனாதிபதி வருகை
/
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அக்.30ல் துணை ஜனாதிபதி வருகை
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அக்.30ல் துணை ஜனாதிபதி வருகை
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அக்.30ல் துணை ஜனாதிபதி வருகை
ADDED : அக் 26, 2025 01:42 AM
கமுதி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் அக்.,30ல் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளதாக பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறினார்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,30ல் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர். குருபூஜை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த முரளிதரன், முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதன் பின் ராமநாதபுரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்த உள்ளனர். பிரதமர் வர இருந்த நிலையில் பீஹார் சட்டசபை தேர்தல் காரண மாக அவரால் வர இயல வில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு வருவார்.
பாரத ரத்னா விருது தேவருக்கு வழங்க கமிட்டி விரைவில் முடிவு செய்யும். பா.ஜ.,வை பொறுத்த அளவில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை தேசியமும் தெய்வீகமும் குடியிருக்கும் இடமாகவும், ஆலயமாகத்தான் நினைக்கிறோமே தவிர அரசியலாக்க நினைக்கவில்லை என்றார்.

