தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இளைஞர்களுக்கு வீடியோ வடிவமைப்பு பயிற்சி 

இளைஞர்களுக்கு வீடியோ வடிவமைப்பு பயிற்சி 

இளைஞர்களுக்கு வீடியோ வடிவமைப்பு பயிற்சி 


ADDED : ஆக 20, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப் படவுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு 3 மாதம் பயிற்சி வழங்கப்படும். இறுதியாக சான்றிதழ், வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். பயிற்சியின் போது தங்கும் விடுதி, உணவு தாட்கோ மூலம் வழங்கப்படும்.

விருப்பமுள்ள இளைஞர்கள் www.tahdco.com எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us