/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி கடலில் தீவிர கண்காணிப்பு
/
தொண்டி கடலில் தீவிர கண்காணிப்பு
ADDED : ஜன 21, 2024 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தேவிபட்டினம், தொண்டி கடலில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக கடலோர காவல் குழும போலீசார் கடலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, காரங்காடு, முள்ளிமுனை, தேவிபட்டினம் கடலுக்குள் நீண்ட துாரம் சென்று கண்காணித்தனர்.
பைனாகுலர் மூலம் மர்ம படகுகள் ஊடுருவல் உள்ளதா, அந்நியர் நடமாட்டம் குறித்தும் ஆய்வு செய்தனர். இப்பணியில் தேவிபட்டினம், தொண்டி கடலோர காவல் குழும போலீசார் கூட்டு ரோந்தில் ஈடுபட்டனர்.

