/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் விஜயதசமி: வில்லிலிருந்து அம்பு எய்தனர்
/
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் விஜயதசமி: வில்லிலிருந்து அம்பு எய்தனர்
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் விஜயதசமி: வில்லிலிருந்து அம்பு எய்தனர்
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் விஜயதசமி: வில்லிலிருந்து அம்பு எய்தனர்
ADDED : அக் 02, 2025 10:29 PM

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவம் கோலாகலமாக நடந்தது.
பத்தாவது நாள் விஜய தசமியை முன்னிட்டு நேற்று காலை 8:30 மணிக்கு உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட வண்ணக் குடை பிடித்தவாறு குதிரை வாகனத்தில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் ரத வீதியில் உலா வந்தார். வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டு இருந்த வன்னி மரத்தின் அருகே கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியாரால் வில்லில் இருந்து அம்பு எய்யப் படும் நிகழ்ச்சி நடந்தது. நாலாபுறமும் அம்பு எய்யப்பட்டவுடன் அவற்றைப் பிடிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திருப்புல்லாணியில் நான்கு ரத வீதியிலும் உலா வந்து பின்னர் பெருமாள் கோயிலை வந்தடைந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு யானை வாகனத்தில் சந்திரசேகர சுவாமி வீதி உலா வந்தார்.
உத்தரகோசமங்கை கிழக்குப் பகுதி வேட்டை மண்டபம் அருகே கோயில் ஸ்தானிக சிவாச்சாரியாரால் நாலாபுறமும் வில்லில் இருந்து அம்பு எய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு சுவாமி புறப்பட்டு சென்றார்.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயில்களில் இருந்து காலையில் எய்யப்பட்ட அம்புகளில் இருந்து மீதமுள்ளவை நேற்று மாலை ராமநாத புரம் அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
விஜயதசமியன்று திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில்களில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.