/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விக்ரம் ரசிகர்கள் மோதல் ஒருவர் மண்டை உடைந்தது
/
விக்ரம் ரசிகர்கள் மோதல் ஒருவர் மண்டை உடைந்தது
ADDED : மார் 28, 2025 01:36 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்பட ரசிகர் காட்சியை பார்க்க வந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரின் மண்டை உடைந்தது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தியேட்டரில் நேற்று காலை 10:30 மணிக்கு விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாக வேண்டிய நிலையில் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவால் வெளியாகவில்லை.
இந்நிலையில் படம் பார்க்க தியேட்டர் முன் குவிந்த விக்ரம் ரசிகர்கள் மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து நடனமாடிய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு தரப்பினரிடையே மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கியதால் அப்பகுதி போர்க்களம் போல் மாறியது. அப்போது ரசிகர் ஒருவரின் மண்டை உடைந்தது. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.