/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
72 மணி நேர உண்ணாவிரதம் கிராம உதவியாளர்கள் முடிவு
/
72 மணி நேர உண்ணாவிரதம் கிராம உதவியாளர்கள் முடிவு
ADDED : டிச 13, 2024 04:05 AM
திருவாடானை: கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
திருவாடானையில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். திருவாடானை வட்டார தலைவர் காந்தி, செயலாளர் முத்து, பொருளாளர் மனோரஞ்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருணை அடிப்டையிலான பணி நியமனம் வழங்கவும், மாதாந்திர சந்தா தொகை செலுத்தி பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்களில் ஓய்வுபெற்ற மற்றும் கிராம உதவியாளர்கள் குடும்பங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்.,சந்தா இறுதித் தொகையை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிச.17 காலை 10:00 மணி முதல் டிச.20 காலை 10:00 மணி வரை நடைபெறும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.