/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமப் பெண்கள்
/
கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமப் பெண்கள்
கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமப் பெண்கள்
கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமப் பெண்கள்
ADDED : மே 17, 2025 12:51 AM
கடலாடி: கடலாடி அருகே பாப்பாகுளம் கிராமத்தில் மூன்று மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து யூனியன் அலுவலகத்தின் முன் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.
கடலாடி அருகே மேலச்செல்வனுார் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாகுளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசிக்கின்றனர். பாப்பாக்குளம் கிராமத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் 5 கி.மீ., ல் உள்ள கடலாடிக்கு தள்ளுவண்டி குடங்களுடன் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
பெரும்பாலானோர் உப்பளத்திலும், விவசாயக் கூலியாக வேலை செய்கின்றனர். இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு டிராக்டர் மூலம் விற்பனை செய்யப்படும் தண்ணீரை குடம் ரூ.10 க்கு விலைக்கு வாங்கிய பயன்படுத்துவதாக புகார் மனுவில் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லாததால் காலி குடங்களுடன் ஏராளமான பெண்கள் கடலாடி யூனியன் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் அலுவலர்கள்போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் பாப்பாகுளம் கிராமத்திற்கு காவிரி நீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.