/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
/
பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
ADDED : ஜன 29, 2024 11:53 PM

ராமநாதபுரம், -சாயல்குடி பேரூராட்சியுடன் மூக்கையூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பூப்பாண்டியபுரம் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதில், பூப்பாண்டியபுரத்தில் ஆடு, மாடு, கோழி வளர்த்தல், விவசாயப்பணி பிரதான தொழிலாக உள்ளது. மூக்கையூர் ஊராட்சியை சாயல்குடி பேரூராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு இணைத்தால் நுாறுநாள் வேலை கிடைக்காது. இதை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அனைத்து வரிகளும் உயர்ந்துவிடும் எனவே மூக்கையூர் ஊராட்சியை சாயல்குடி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.