/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை எதிர்பார்ப்பில் கிராம மக்கள்
/
கடலாடி அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை எதிர்பார்ப்பில் கிராம மக்கள்
கடலாடி அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை எதிர்பார்ப்பில் கிராம மக்கள்
கடலாடி அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை எதிர்பார்ப்பில் கிராம மக்கள்
ADDED : நவ 18, 2024 06:39 AM

கடலாடி : கடலாடியில் அரசு தாலுகா மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடலாடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
சர்க்கரை நோய், பிரஷர் உள்ளிட்ட நோய்களுக்கு மாதா மாதம் மாத்திரை சாப்பிடுபவர்கள் அதிகம் வருகின்றனர்.
இங்கு பெரும்பாலும் பிரசவங்கள் நடப்பதில்லை. சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடலாடி நெடுஞ்சாலை பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் போது அவசர சிகிச்சைக்கு டாக்டர் இருப்பதில்லை.
இதனால் கீழக்கரை, முதுகுளத்துார், சாயல்குடி, பரமக்குடி, துாத்துக்குடி உள்ளிட்ட பகுதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை தான் உள்ளது. மருத்துவமனையில் கருங்குளம் ஊராட்சி சார்பில் 2012ல் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
எனவே நோயாளிகளுக்கு குடிநீர் வசதி செய்ய வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோடு குண்டும் குழியுமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ளதால் நோயாளிகள் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர். இங்கு பேவர் பிளாக் கற்கள் பதித்த பிளாட்பாரங்கள் அமைக்க வேண்டும்.
வளாகம் புதர் மண்டியிருப்பதால் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.
எனவே அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மருத்துவப் பணிகள் இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.