/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பல ஆண்டுகளாக பஸ் வசதியின்றி கிராம மக்கள் விரக்தி! ஓட்டுக்காக ஏமாற்றும் ஆட்சியாளர்கள்
/
பல ஆண்டுகளாக பஸ் வசதியின்றி கிராம மக்கள் விரக்தி! ஓட்டுக்காக ஏமாற்றும் ஆட்சியாளர்கள்
பல ஆண்டுகளாக பஸ் வசதியின்றி கிராம மக்கள் விரக்தி! ஓட்டுக்காக ஏமாற்றும் ஆட்சியாளர்கள்
பல ஆண்டுகளாக பஸ் வசதியின்றி கிராம மக்கள் விரக்தி! ஓட்டுக்காக ஏமாற்றும் ஆட்சியாளர்கள்
ADDED : ஏப் 04, 2024 11:30 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பஸ் வசதியின்றி பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுத்து, ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் ஆளும்அரசியல் கட்சிகளால் அப்பகுதியினர் விரக்தி அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே குருணிபச்சேரி, சொக்கன்பச்சேரி, ராமநாதமடை, சிலுக வயல், இரட்டையூபருணி, வில்லடிவகை, சவேரியார்பட்டினம், புல்லமடை, வல்லமடை, மேலமடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுப்புற பகுதி கிராமங்கள் இதுவரை பஸ் வசதியே இல்லாத நிலையில் உள்ளன. மேற்கண்ட பகுதி கிராம மக்கள் 3 கி.மீ., தொலைவில் உள்ள ஆர்.எஸ்.மங்கலத்திற்கும், வல்லமடை, மேலமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்கள் 7 கி.மீ., தொலைவில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அல்லது தேசிய நெடுஞ்சாலை சவேரியார்பட்டினம் விலக்கு பகுதிக்கு சென்று வெளியூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர். சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும், அப்பகுதிக்கு பஸ் விடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அ.தி.மு.க., தி.மு.க., என திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்த நிலையிலும், இன்று வரை, அப்பகுதி கிராமங்களுக்கு விடிவு பிறக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் ஆளும் தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக, கருமாணிக்கமும், எம்.பி., யாக நவாஸ்கனியும், வெற்றி பெற்ற நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படவில்லை என்பது புகாராக உள்ளது. இந்த நிலையில், ஆளும் தி.மு.க.,வினர் மீண்டும் நவாஸ்கனிக்கு அதே வாக்குறுதியை கூறி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

