/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான நிலையில் குடிநீர் சேகரிக்கும் கிராம மக்கள்
/
ஆபத்தான நிலையில் குடிநீர் சேகரிக்கும் கிராம மக்கள்
ஆபத்தான நிலையில் குடிநீர் சேகரிக்கும் கிராம மக்கள்
ஆபத்தான நிலையில் குடிநீர் சேகரிக்கும் கிராம மக்கள்
ADDED : அக் 13, 2025 05:35 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் அம்மன் கோயில் அருகே ஏர்வால்வு தொட்டியில் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் வேறு வழியின்றி கிராம மக்கள் குடிநீர் சேகரிக்கின்றனர்.
வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளாக காவிரி குடிநீர் வசதி இல்லை. இதனால் வேறு வழியின்றி மக்கள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன் படுத்துகின்றனர்.
வெண்ணீர்வாய்க்கால் அம்மன் கோயில் அருகே காவிரி குடிநீர் செல்லும் குழாயில் ஏர்வால்வு தொட்டி அமைக்கப் பட்டது.
அங்கு வீணாகும் குடிநீரை கிராம மக்கள் சேகரிக்கின்றனர் அதற்கு பிறகு மக்கள் பயன்பெறும் வகையில் சிறிதாக தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் நிரம்பி வழியும் குடிநீரை கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். வெண்ணீர்வாய்க்கால் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து மக்கள் காவிரி குடிநீர் பிடித்து செல் கின்றனர்.
தொட்டியின் அடிப்பகுதி மணல் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. குடிநீர் சேகரிக்க வரும் கிராம மக்கள் வேறு வழியின்றி ஆபத்தான நிலையில் பிடித்து செல்கின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொட்டியின் அடிப்பகுதியை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.