/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாத்தக்கோன்வலசை டோல்கேட் ஏலதாரர்களால் வருவாய் இழப்பு கிராம மக்கள் புகார்

ADDED : ஜன 07, 2025 04:31 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சி டோல்கேட்டை ஏலம் எடுத்தவர்கள் பணம் செலுத்தாமல் இழுத்தடித்ததால், வருவாய் இழப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் செய்தனர்.
இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் கலோனுக்கு, சாத்தக்கோன்வலசை கிராம மக்கள் அனுப்பிய மனுவில்:
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் உள்ள அரியமான் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா வாகனத்திற்கு நுழைவுவரி வசூலிக்க, கட்டண கழிப்பறையை தனியாருக்கு குத்தகைக்கு விட டிச., 23ல் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது.
இதில் சிலர் டோல்கேட்டை ரூ.40 லட்சத்திற்கும், கழிப்பறையை ரூ. 10 லட்சத்திற்கும் ஏலம் எடுத்தனர்.
ஆனால் ஏலத் தொகையை செலுத்தாமல் பின்வாங்கினர். பின் டிச., 30ல் ஊராட்சி விதிகளின்படி மீண்டும் பகிரங்க பொது ஏலம் நடந்தது. இதில் டோல்கேட்டை ரூ. 17 லட்சத்திற்கும், கழிப்பறை ரூ.4 லட்சத்து 18 லட்சத்திற்கும் ஏலம் போனது.
டோல்கேட் ஏலம் எடுத்தவர் பணம் செலுத்த காலதாமதம் செய்வதால் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, ஊராட்சி நிர்வாகத்தை ஏமாற்றி உள்ளனர். எனவே ஏலத்தொகையை செலுத்தாவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.