/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்மயானம், அங்கன்வாடி மையம் வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
/
மின்மயானம், அங்கன்வாடி மையம் வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
மின்மயானம், அங்கன்வாடி மையம் வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
மின்மயானம், அங்கன்வாடி மையம் வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 25, 2025 06:19 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளம் கிருஷ்ணாபுரத்தில் நவீன எரியூட்டும்மின் மயானம் மற்றும் அங்கன்வாடி மையம் அமைத்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
கிருஷ்ணாபுரம் கிராமத்தலைவர் தங்கராஜ் தலைமையில், கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தியுடன் அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
அதில், கிருஷ்ணாபுரம், சோகையன் தோப்பு ஆகிய கிரமங்களை சேர்ந்த இரு சமூக மக்கள் மயானத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பொது மயானத்தை நவீன எரியூட்டும் மயாமனமாக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து அதனை செயல்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் விட்டுள்ளது.
மேலும் அங்கன்வாடி மையம் கட்டடம் திட்டத்தை புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். எனவே கிருஷ்ணாபுரத்தில் நவீன எரியூட்டும் மின்மயானம் அமைக்க வேண்டும். தற்போது கிராம மக்கள் பங்களிப்புடன் மரத்தடி நிழலில் நடக்கும் பாலர் பள்ளியில் 36 மாணவர்கள் படிக்கின்றனர்.
அவர்களின் நலன் கருதி புதிததாக கிருஷ்ணாபுரத்தில் அங்கன்வாடி மையம் அமைத்துதர கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.