/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.ஓ., பிளான்ட் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை
/
ஆர்.ஓ., பிளான்ட் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை
ADDED : மே 27, 2025 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காவிரி குடிநீர் ஒரு சில நாட்கள் மட்டும் வருவதால் தண்ணீருக்காக காத்திருக்கும் சூழல் உள்ளது.
மக்கள் கூறியதாவது:
கூவர்கூட்டம் கிராமத்தில் காவிரி குடிநீர் ஒரு சில நாட்கள் மட்டும் வருகிறது. இதனால் தினந்தோறும் குடிநீருக்காக டிராக்டர் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அத்தியாவசிய வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றோம். கிராமத்தில் நிரந்தரமாக ஆர்.ஓ., பிளான்ட் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.