/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயிலை அபகரிக்க முயற்சி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
/
கோயிலை அபகரிக்க முயற்சி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 10, 2025 04:24 AM
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடியில் உள்ள திருவேட்டுடைய அய்யனார் கோயிலை, நடிகர் ஒருவர் ஆதரவுடன், சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக புகார் தெரிவித்து மக்கள் கோயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் காட்டுப்பரமக்குடி திருவேட்டுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் காட்டுப்பரமக்குடி கிராமத்தின் பூர்வீக கோயிலாகும். மேலும் மதுரையைச் சேர்ந்த நடிகர் ஒருவரின் குலதெய்வமாக உள்ளது.
கோயில் பூஜாரி பாக்யராஜ் ஆக்கிரமித்து அவருக்கு சொந்தமான கோயிலாக மாற்றம் செய்ய முயற்சித்து வருவதாகவும், இதற்கு நடிகர்ஆதரவாக செயல்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டிள்ளனர். கோயிலை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரி அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

