/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிள்ளையார்குளம் கிராமத்தில் சாலையில் ஓடும் கழிவுநீர் வேதனையில் கிராம மக்கள்

ADDED : ஆக 28, 2025 11:25 PM

சாயல்குடி: சாயல்குடி அருகே பிள்ளையார் குளம் ஊராட்சி உள்ள தெருக்களில் கழிவுநீர் வாறுகால் அமைக்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக சாலையில் ஓடுவதால் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படு கின்றனர்.
பிள்ளையார் குளம் கிராமத்தில் கிழக்கு தெரு, மேற்கு தெரு, நடுத்தெரு, வடக்கு தெரு என தெருக்கள் உள்ளன. 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் தெருக்களில் முறையாக சாலை வசதி இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. கழிவுநீர் செல்வதற்கு முறையான வாறுகால் வசதி இல்லாததால் ஆண்டுக் கணக்கில் சாலையின் நடுவே கழிவுநீர் தேங்கி குளம் போல் உள்ளது.
குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பகலிலும் இரவிலும் கொசுத்தொல்லை உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுநீர் தேக்கத்தால் நோய்தொற்று அச்சத்தில் உள்ளனர்.
எனவே கடலாடி யூனியன் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தனி அலுவலர் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.