/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சியில் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
/
பேரூராட்சியில் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 14, 2025 08:09 PM
முதுகுளத்துார்:
முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சி முதுகுளத்துார் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சியில் செல்வநாயகபுரம், துாரி செயல்பட்டு வந்தது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்துார் பேரூராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த சில மாதங்களாக செல்வநாயகபுரம் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்து வந்தனர்.
தற்போது செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்துார் பேரூராட்சி இணைக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசை கண்டித்து போராட துாண்டாதே என்ற வாசகத்துடன் வரும் தேர்தலில் தேர்தலை புறக்கணிப்போம் என்று நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.