/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
/
அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 19, 2024 05:04 AM
ராமநாதபுரம்: அபிராமம் பேரூராட்சியுடன் நத்தம் ஊராட்சியைச் சேர்ந்த 7 குக்கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
அபிராமம் பேருராட்சி விரிவாக்கத்திற்காக அருகில் 1 கி.மீ., ல் உள்ள நத்தம் ஊராட்சியை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நத்தம், ஆண்டநாயகிபுரம், முத்தாதிபுரம், கள்ளிகுளம், அண்ணாநகர், மணிநகர் ஆகியவை கிராமங்கள் என்பதால் விவசாயம் சிறிய அளவில் நடக்கிறது.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்கள் வருமானம் ஈட்டுகின்றனர். பேரூராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை கிடைக்காது. எனவே அத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.