/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கைலாச சமுத்திரம் கிராமத்தில் இடுகாட்டில் ரோடு அமைப்பு கிராமத்தினர் எதிர்ப்பு

ADDED : நவ 04, 2025 04:02 AM
ஆர்.எஸ்.மங்கலம்: கைலாச சமுத்திரம் கிராம மக்களுக்கான இடுகாட்டு வழியாக தாலுகா அலுவலகத்திற்கு ரோடு அமைக்கப்பட்டுள்ளதால் இடுகாட்டு இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, யூனியன் அலுவலகம் அருகே கைலாச சமுத்திரம் கிராம பட்டியல் இன மக் களுக்கான இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டு பகுதி வழியாக புதிதாக கட்டப்படும் தாலுகா அலு வலகத்திற்கு செல்வதற்கு கிராவல் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கான இடு காட்டில் மயானம் அமைத்துக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இடுகாட்டு பணிகள் துவங்கிய நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் பணிகள் துவங்காமல், வேறு பகுதியில் பணிகள் துவங்கியதால் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இடுகாடு பாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ராமமூர்த்தி, டி.எஸ்.பி., சீனிவாசன், பி.டி.ஓ., கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத அப்பகுதி மக்கள் இன்று கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளதாக கூறி கலைந்து சென்றனர்.