/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்து மாதமாக குடிநீர் சப்ளை இல்லை பஸ் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

ADDED : ஏப் 22, 2025 05:46 AM

திருவாடானை: துத்தாகுடி ஊராட்சிக்கு ஐந்து மாதமாக குடிநீர் சப்ளை இல்லாததால் கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடானை அருகே துத்தாகுடி ஊராட்சி கம்பக்கோட்டை, செகுடி மற்றும் துத்தாகுடியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக் கிராமங்களில் கடந்த ஐந்து மாதமாக குடிநீர் சப்ளை இல்லை. பருவ மழையின் போது குளங்களில் தண்ணீர் தேங்கியதால் பயன்படுத்திக் கொண்டனர்.
தற்போது கடும் வெயிலால் குளங்கள் வறண்டு விட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஒரு குடம் நீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்தினர்.
அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை தேவகோட்டை- வட்டாணம் ரோட்டில் குருந்தங்குடி பஸ் ஸ்டாப்பில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடானை தாசில்தார் ஆண்டி மற்றும் அலுவலர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். பஸ்மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.