/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுடுகாட்டு பாதையை மீட்க கிராம மக்கள் வலியுறுத்தல்
/
சுடுகாட்டு பாதையை மீட்க கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பாரனுார் ஊராட்சி கைலாசூத்திரம், இந்திரநகர் காலனி மக்கள் தங்களுக்குரிய சுடுகாட்டு பாதையை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கைலாசூத்திரம் ஊர் தலைவர் கோட்டை முத்து தலைமையில் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
இதில், காலனியில் 400 பேர் குடும்பத்துடன் வசிக்கிறோம். வில்லடிவாகையில் 25 சென்ட் இடத்தில் உள்ள சுடுகாட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்துகிறோம்.
சிலர் ரியல்எஸ்டேட் தேவைக்காக சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்றித்தர கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.