/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கழிவு நீர் சேகரிப்பு மையங்களாக மாறிய ஊருணிகள்
/
ராமநாதபுரத்தில் கழிவு நீர் சேகரிப்பு மையங்களாக மாறிய ஊருணிகள்
ராமநாதபுரத்தில் கழிவு நீர் சேகரிப்பு மையங்களாக மாறிய ஊருணிகள்
ராமநாதபுரத்தில் கழிவு நீர் சேகரிப்பு மையங்களாக மாறிய ஊருணிகள்
ADDED : ஜூலை 10, 2025 10:48 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் முறையாக பராமரிப்பு செய்யாததால் வரத்து கால்வாய்கள் துார்ந்து கழிவு நீர் சேகரிக்கும் இடங்களாக மாறி வருகிறது.
வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் முன்னோர் நீர் மேலாண்மை செய்ய அனைத்து கிராமங்களிலும் மக்கள் பயன்பாட்டிற்காகவும், கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க சங்கிலி தொடர் போல் ஊருணிகளை அமைத்தனர். இதனை முறையாக பராமரிப்பு செய்தனர்.
கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை இல்லாமல் இந்த ஊருணிகள் பயன்பட்டன. நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. தற்போது மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஊருணிகளில் இருந்த வரத்துக்கால்வாய்கள் அனைத்தும் மக்களால் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களாக மாறிவிட்டன.
மழை நீர் வெளியில் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளில் தேங்க ஆரம்பித்தது. கழிவு நீர், குப்பை அனைத்தும் ஊருணிகளுக்குள் சேர்ந்து சுகாதாரக்கேடும் துர் நாற்றமும் வீச ஆரம்பித்து விட்டன.
இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள், என அனைத்து ஊருணிகளிலும் மழைக்காலத்தில் நீர் நிரம்பி வழிகின்றன. இருந்தும் குப்பை, கழிவு நீர் கலப்பு காரணமாக துர்நாற்றம் வீசுவதால் மக்களால் ஊருணிகளில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது.
தேங்கியுள்ள தண்ணீர் அசுத்தமாகியுள்ளதால் கோடை காலங்களில் கால்நடைகளுக்கு கூட இந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து ஊருணிகளையும் துார் வாரி, பொதுமக்கள் குப்பை கொட்டாமல் பாதுகாத்தால் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.