/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம்
/
ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம்
ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம்
ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம்
ADDED : ஆக 30, 2025 03:53 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 'நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்...' எனும் தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் 45 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர். அனைத்து விநாயகர் சிலைகளும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு டிராக்டரில் அணிவகுத்து நின்றன.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்று பேசியதாவது: ஹிந்து மக்கள் தொகை குறைவதால் பாதிக்கப்படும் பகுதிகளில் ராமநாதபுரம் ஒன்று. இதன் காரணமாக பா.ஜ., தவிர அனைத்து கட்சிகளும் பெரும்பான்மை மக்கள் அடிப்படையில் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். ஹிந்து மக்களுக்கு அரணாக இருந்தவர் சேதுபதி மன்னர். பரந்த மனப்பான்மையுடன் சிறுபான்மையினருக்கு மன்னர்கள் ஆதரவளித்தனர்.
அரசியல் காரணமாக ஹிந்து கோயில்களுக்கு செல்ல அரசியல் தலைவர்கள் மறுக்கின்றனர். சாதாரண மக்கள் கஷ்டத்தை போக்க மட்டும் கோயில்களுக்கு செல்கின்றனர். அந்த கோயில்களுக்கு ஒரு பிரச்னை வரும் போது அவர்கள் வர மறுக்கின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் தி.மு.க.,வுக்கு தான் ஓட்டு போடுவர். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளேன் எனக் கூறினாலும் ஓட்டு போடமாட்டார்கள். இந்த நிலை மாறவேண்டும் என தான் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.கிராமத்து கோயில்கள் அனைத்தும் மேம்படுத்தப்படாமல் உள்ளன என்றார். பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அரண்மனை நோக்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நொச்சியூருணியில் கரைத்தனர்.
சுமார் 3 மணி நேரம் நடந்த ஊர்வலத்தில் வழிநெடுகும் மக்கள் திரண்டு வழிபட்டனர். ஆர்.எஸ்.எஸ்.,மாநில தலைவர் ஆடல் அரசன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலளார் சண்முகநாதன், ஹிந்து முன்னணி நகர் தலைவர் பாலமுருகன், நகர் பொதுச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், பொது செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.