/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் விநாயகர் வீதியுலா
/
ராமேஸ்வரம் கோயிலில் விநாயகர் வீதியுலா
ADDED : ஆக 28, 2025 04:54 AM

ராமேஸ்வரம் : விநாயகர் சதுர்த்தி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா சென்றார்
நேற்று காலை ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் புறப்பாடாகி வீதிஉலா சென்றார். அப்போது கோயில் யானை ராமலட்சுமி விநாயகரை வணங்கி வரவேற்றதை கண்ட பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின் விநாயகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காட்டுபிள்ளையார் கோயிலில் எழுந்தருளினார். இங்கு சிறப்பு பூஜை மகா தீபாராதனை நடந்ததும், மீண்டும் அங்கிருந்து கோயிலுக்கு திரும்பினார்.
மேலும் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ராமேஸ்வரம் திட்டக்குடியில் பிரதிஷ்டை செய்த ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி விநாயகர் சிலை களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
இதில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகர், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.