ADDED : செப் 12, 2026 01:01 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின் ஏழாம் நாளில், காமதேனு வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
முன்னதாக மூலவர் விநாயகருக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் முக்கிய விதிகள் வழியாக, வீதி உலா வந்த விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். நாளை(செப்.14) முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது.
