/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
/
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
ADDED : ஏப் 22, 2025 05:39 AM

ராமநாதபுரம்: மேற்கு வங்கத்தில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதால் பயங்கரவாதிகளை ஒழிக்க உடனடியாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியது.
ராமநாதபுரம் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ரமணன் தலைமையிலான
நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில், மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. விழாக்கள்
நடத்தப்படுவதற்கும் நீதிமன்ற அனுமதி தேவைப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. தேசிய புலனாய்வுத்துறை விசாரித்து குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும்.
அம்மாநிலத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.