/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவேகானந்தர் ராமநாதபுரம் வருகை தந்த தினவிழா
/
விவேகானந்தர் ராமநாதபுரம் வருகை தந்த தினவிழா
ADDED : ஜன 30, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், -சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது ராமநாதபுரம் வருகை தந்த தினவிழா ராமகிருஷ்ணா மடத்தில் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரத்தில் உள்ள விவேகானந்தர் ஸ்துாபியில் மாலை அணிவிக்கப்பட்டது. பின் ராமகிருஷ்ண மடத்தில் நடந்த விழாவில் பலராமகிருஷ்ண பஜன் மண்டலி சார்பில் பஜனை நடந்தது.
சுவாமி தர்மகரானந்தர் வரவேற்றார். விவேகானந்தா வித்தியாலயா சி.பி.எஸ்.சி., பள்ளியின் தாளாளர் சுவாமி சுதபானந்தர் மற்றும் நாகஜோதி, வழக்கறிஞர் பழனிகுமார் வாழ்த்தி பேசினர். சிவராமன் நன்றி கூறினார்.