/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் வ.உ.சி., பிறந்த நாள் விழா
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் வ.உ.சி., பிறந்த நாள் விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் வ.உ.சி., பிறந்த நாள் விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் வ.உ.சி., பிறந்த நாள் விழா
ADDED : செப் 05, 2025 11:24 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனை அருகே அலங்கரிக்கப்பட்ட வ.உ.சி., படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர் வலர்கள், தொழிலதிபர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். வெள் ளாளர் முன்னேற்றக் கழகம் நிறுவனர் அண்ணா சர வணன், மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார் மேகம், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, பா.ஜ., மாவட்டத் தலைவர் முரளி தரன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முக நாதன், காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது.
* பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகாசபை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வ.உ.சி., மஹாலில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு மகா சபை நிறுவனர் கார்த்திகேயன் மாலை அணிவித்தார்.
வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் குருசுப்ர மணியன், நிர்வாகி இருளப்பன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சுகன்யா வரவேற்றார். டாக்டர் தினேஷ் முகில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பள்ளி, சபை நிர்வாகிகள் வின்சென்ட், முனியாண்டி, சவரிமுத்து, லோகநாத முருகன், பாஸ்கர சேதுபதி, முருகேசன், குமரேசன், ராமகிருஷ்ணன், பன்னீர்செல்வம், மகேஸ்வரன், நாகேந்திரன், ரமேஷ் பாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தின விழாவை யொட்டி அனைத்து ஆசிரியர்களும் கவுர விக்கப்பட்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளி நிர்வாகி கோவிந்தராஜா நன்றி கூறினார்.
--* காட்டு பரமக்குடியில் உள்ள வ.உ.சி., சிலைக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஹாரிஸ் தலைமையில் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்தனர். தி.மு.க., சார்பில் பரமக்குடி எம் எல் ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க., சார்பில் நகர் செயலாளர் வின்சென்ட் தலைமையில் கட்சி யினர் மரியாதை செலுத்தி னர். பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் முரளி தரன், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன், நகர் தலைவர் சுரேஷ் பாபு உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க., சார்பில் நகர் துணைத் தலைவர் குணா தலைமையில் மாலை அணிவித்தனர். ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் சார்பில் கல்லுாரி மாணவர்கள் வ.உ.சி., யின் தியாகத்தை போற்றும் வகையில் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.