/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கைப்பந்து விளையாட்டு திடல் திறப்பு
/
கைப்பந்து விளையாட்டு திடல் திறப்பு
ADDED : செப் 23, 2025 04:00 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தை பகுதியில் இஸ்லாமிய வளர்பிறை வாலிபர் விளையாட்டு குழுவின் கைப்பந்து விளையாட்டு திடல் திறப்பு விழா நடை பெற்றது.
ஜமாத் தலைவர் ஹாஜா நஸ்ருதீன் தலைமை வகித்தார். மலேசிய தொழிலதிபர் டத்தோ சீனி அப்துல் காதர் விளையாட்டு திடலை திறந்து வைத்தார். முதல் போட்டியை தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத் துணைத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி துவக்கி வைத்தார்.
மாவட்ட வாலிபால் கழக செயலாளர் ரமேஷ் பாபு சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மைதானத்தில் பல்வேறு அணியினர் கலந்து கொண்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் பேரூராட்சி தலைவர் சாகுல் ஹமீது, தொழிலதிபர் மாரிமுத்து உட்பட ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.