ADDED : அக் 30, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களில் சட்ட தன்னார்வலராக சேர விண்ணப்பிக்கலாம் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
விண்ணப்பித்த அனைவருக்கும் நவ.,1 (சனிக்கிழமை) மதியம் 1:00 மணிக்கு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஏ.டி.ஆர்., மையத்தில் நேர் காணல் நடக்கவுள்ளது.
விண்ணப்பித்தவர்கள் உரிய சான்றுகள், ஆவணங்களுடன் வர வேண்டும். தகுதியான 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
பின் சட்டப்பணிகள் நடத்தும் விழிப்புணர்வு முகாம்களில் தன்னார்வலராக பங்கேற்கலாம் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

