ADDED : மார் 19, 2024 05:27 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மகளிர் திட்டத்துறை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ேஹலிபேடு மைதானத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.
போட்டியை துவக்கி வைத்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறியதாவது: மகளிர் குழுக்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு வாக்காளர்களிடையே ஓட்டளிப்பதன் அவசியம், ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என்பதை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்(பயிற்சி) சிவானந்தம், மகளிர் திட்ட அலுவலர் சையது சுலைமான், உதவி திட்ட அலுவலர்கள் அரவிந்த், அழகப்பன், தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
