ADDED : மார் 26, 2026 07:42 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம், ஊரக வாழ்வாதார இயக்கதிட்டத்துறை இணைந்து துாய்மைப் பணியாளர்கள் மூலம் ராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
இதில், பங்கேற்ற மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஏப்.,23ல் தேர்தல் நாளன்று வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளித்து மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு, ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வின், அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.-----
