ADDED : ஏப் 20, 2026 05:24 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் வேளாண் துறை சார்பில் சிறுதானியங்கள் மற்றும் காய்கறி, பழங்கள், மக்காச்சோளத்தை கொண்டு வாக்காளர் விழப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கண்காட்சியை பார்வையிட்டு பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.
கலைநிகழ்ச்சி நடந்தது. ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, வேளாண்மை இணை இயக்குநர் பாஸ்கரமணியன், துணை இயக்குநர்(வணிகம்) கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
