/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுச்சாவடிகளில் நவ.16, 17, 23, 24ல் வாக்காளர்கள் பட்டியல் திருத்த முகாம்

ADDED : நவ 07, 2024 01:39 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1374 ஓட்டுச் சாவடிகளில் நவ.16, 17 மற்றும் 23, 24ல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் கமிஷன்அறிவுறுத்தலின்படி அக்.29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2025 ஜன.1 தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.
தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லதுஅலைபேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இது தவிர பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்.
வேலைக்கு செல்வோரின் வசதிக்காக 1374 ஓட்டுச்சாவடிகளிலும் நவ.16,17 மற்றும்23, 24 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்றார்.