தொண்டி 5 வது வார்டுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தொண்டி 5 வது வார்டுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : மே 06, 2025 05:57 AM

தொண்டி: தொண்டி பேரூராட்சியில் காலியாக உள்ள 5 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்காளர் பட்டியில் வெளியிடபட்டது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்ட தொண்டிஸ்வரன், 2023 மே மாதம் இறந்தார்.
அந்த வார்டுக்கான பதவி காலியாக உள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் சில நாட்களுக்கு முன்பு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வந்தன. ஆய்விற்கு பின் அந்த மின்னணு ஓட்டு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கபட்டது.
தேர்தல் நடத்துவதற்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிந்து நேற்று வாக்காளர் பட்டியில் வெளியிடபட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, பட்டியலை வெளியிட்டார். இதில் 481 ஆண்கள், 501 பெண்கள் 982 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
