/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் வயல்களுக்கு சென்று விடுவதால் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தொய்வு

ADDED : நவ 18, 2025 04:01 AM
திருவாடானை: திருவாடானையில் 90 சதவீதம் படிவம் வழங்கபட்ட நிலையில், தற்போது படிவம் வாங்கும் பணிகள் நடக்கிறது. விவசாயிகள் வயல்களுக்கு சென்று விடுவதால் படிவம் வாங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்காக செல்லும் பி.எல்.ஓ.,க்களிடம் வாக்காளர்கள் ஆர்வமாக படிவங்களை வாங்கினர். பல ஓட்டுச்சாவடிகளில் இடம் பெயர்ந்த இரட்டைபதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் அதிகம் இருப்பதாக கண்டறியபட்டது.
90 சதவீதத்திற்கு மேல் படிவம் வழங்கபட்ட நிலையில் படிவம் வாங்கும் பணிகள் நடக்கிறது.
திருவாடானை பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காலையில் செல்லும் விவசாயிகள் மாலையில் தான் வீடு திரும்புகின்றனர். வாக்காளர் படிவம் வாங்குவதற்காக வீடுகளுக்கு செல்லும் பி.எல்.ஓ.க்கள், வீடுகளில் யாரும் இல்லாததால் ஏமாற்றமடைகின்றனர்.
இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:-- வாக்காளர்கள் தங்களது பூர்த்தி செய்யபட்ட படிவங்களை பி.எல்.ஓ.க்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
தற்போது ஒப்படைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற சிரமம் ஏற்படும். பூர்த்தி செய்த படிவங்களை ஒப்படைக்க ஆர்வம் காட்டவேண்டும் என்றனர்.