/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி - தனுஷ்கோடி நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பிற்கான நிதிக்காக காத்திருப்பு
/
பரமக்குடி - தனுஷ்கோடி நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பிற்கான நிதிக்காக காத்திருப்பு
பரமக்குடி - தனுஷ்கோடி நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பிற்கான நிதிக்காக காத்திருப்பு
பரமக்குடி - தனுஷ்கோடி நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பிற்கான நிதிக்காக காத்திருப்பு
ADDED : டிச 13, 2024 03:59 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி - தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் நிலம் கையப்படுத்தும் பணிகளில் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில் நிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாம்பன் பாலத்தில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி வரை நான்குவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்குரிய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கிறது. தற்போது பரமக்குடி முதல் பாம்பன் வரை நிலம் கையப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஆனால் நிலத்திற்குரிய இழப்பீடு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை எண் 49 ல் பரமக்குடி- தனுஷ்கோடி நான்கு வழிச்சாலை திட்டத்தில் அரியனேந்தல் துவங்கி சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பு பணி முடிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் துவங்கி பாம்பன் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. அந்நிலங்களுக்குரிய இழப்பீடு நிதி கிடைத்தவுடன் ஓரிரு மாதங்களில் நில எடுப்பு பணிகள் முடிந்து விடும். 2025ல் பரமக்குடி- தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நான்கு வழிச்சாலை பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
தற்போது பரமக்குடி முதல் பாம்பன் வரை நிலம் கையப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஆனால் நிலத்திற்குரிய இழப்பீடு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

