/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் காத்திருப்பு
/
டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் காத்திருப்பு
ADDED : பிப் 18, 2025 04:55 AM

தொண்டி: தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றுவதால் சிகிச்சைக்காக நோயாளிகள் நீண்டநேரம் காத்திருக்கின்றனர். தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
தினமும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
தொண்டி மக்கள் கூறுகையில், கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரி டிச.30 ல் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். இன்னமும் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கைக்குழந்தையுடன் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் நீண்டநேரம் காத்திருக்கின்றனர். சிலர் மயக்கத்தில் வராண்டாவில் படுத்து விடுகின்றனர். நோயாளிகளின் நலன் கருதி கூடுதல் டாக்டர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.