sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் நகராட்சி புது பஸ்டாண்ட் திறப்பு விழாவிற்கு ...காத்திருப்பு

/

ராமநாதபுரம் நகராட்சி புது பஸ்டாண்ட் திறப்பு விழாவிற்கு ...காத்திருப்பு

ராமநாதபுரம் நகராட்சி புது பஸ்டாண்ட் திறப்பு விழாவிற்கு ...காத்திருப்பு

ராமநாதபுரம் நகராட்சி புது பஸ்டாண்ட் திறப்பு விழாவிற்கு ...காத்திருப்பு


ADDED : செப் 09, 2025 03:51 AM

Google News

ADDED : செப் 09, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.

கட்டடம் பழுது, போதிய இடவசதியின்மை காரணமாக 2023 ஆக.,3ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் 16, 909 சதுர அடியில் கட்டுமானப் பணிகள் துவங்கியது. ஓராண்டில் விரிவாக்கப்பணிகள் முடிந்து புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டனர்.

தற்சமயம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இட நெருக்கடியால் கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன. குடிநீர், கழிப்பறை போதுமான அளவில் இல்லை.

பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளிய வரும் போதும் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி, அலுவலகம் நேரங்களில் பயணிகள் பஸ் ஏறி, இறங்க சிரமப் படுகின்றனர்.

இந்தநிலையில் இரு ஆண்டுகளுக்கு பின் தற்போது பணிகள் முடிந்தும் முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது திறக்க திட்டமிட்டு காத்திருக்கின்றனர். இந்த மாதத்திலாவது புது பஸ் ஸ்டாண்டை திறந்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிந்துள்ளது. இந்த விபரத்தை அரசுக்கு தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட உள்ளது என்றார்.

ராமநாதபுரம், செப்.9-

ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்டில் விரிவாக்க பணிகள் 2023ல் துவங்கி ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிட்டு தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் முடிந்தும் முதல்வர் ஸ்டாலின் திறப்பதற்காக காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us