/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு 'வாக்கி டாக்கி' கோல்கட்டா சம்பவம் எதிரொலி
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு 'வாக்கி டாக்கி' கோல்கட்டா சம்பவம் எதிரொலி
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு 'வாக்கி டாக்கி' கோல்கட்டா சம்பவம் எதிரொலி
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு 'வாக்கி டாக்கி' கோல்கட்டா சம்பவம் எதிரொலி
ADDED : செப் 22, 2024 02:21 AM

ராமநாதபுரம்:கோல்கட்டா சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் முன்னோடி திட்டமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பாதுகாவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோல்கட்டாவில் முதுநிலை மருத்துவ பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தமிழகத்தில் பயிற்சி டாக்டர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு வழங்குவதில் தீவிரம் காட்டப்படுகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடி புதிய கட்டடத்தில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவுக்கு தனி கட்டடம், பழைய மருத்துவமனை கட்டடங்களில் பல சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.
பல்வேறு தளங்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் எங்கு பிரச்னை என்றாலும் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பதில் சிக்கல் உள்ளது. 50 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறையில் அனைத்து கேமராக்களையும் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
அனைத்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் தனியார் நிறுவன பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராமநாதபுரத்தில் கிரைஸ்டல் நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 10 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், பிரதே பரிசோதனை செய்யப்படும் பகுதியில் உறவினர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இங்கு பாதுகாப்பை மேம்படுத்த டீன் சுபிதா நடவடிக்கை எடுத்தார்.
இதன்படி தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் முன்னோடி திட்டமாக காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி ராமநாதபுரத்தில் முதன் முறையாக செய்யப்பட்டுள்ளது.