/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சிவில் நீதிமன்றம் வேண்டும்: வழக்கறிஞர்கள் மனு
/
ராமேஸ்வரத்தில் சிவில் நீதிமன்றம் வேண்டும்: வழக்கறிஞர்கள் மனு
ராமேஸ்வரத்தில் சிவில் நீதிமன்றம் வேண்டும்: வழக்கறிஞர்கள் மனு
ராமேஸ்வரத்தில் சிவில் நீதிமன்றம் வேண்டும்: வழக்கறிஞர்கள் மனு
ADDED : செப் 24, 2024 04:24 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சிவில் நீதிமன்றம் திறக்கக் கோரி உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
ராமேஸ்வரத்தில் அமையும் புதிய நீதிமன்ற கட்டடம் மற்றும் ராமேஸ்வரம் நீதிமன்றப் பணிகள் குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் நிர்மல் குமார், மாலா ஆகியோர் ஆய்வு செய்தனர். நீதிபதிகளிடம் ராமேஸ்வரம் தீவு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பிரின்சோ ரைமண்ட் மனு அளித்தார்.
இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளடக்கிய தீவுப் பகுதியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் குற்றவியல் வழக்குகள் மற்றும் ராமேஸ்வரம் முதல் உச்சிப்புளி வரை உள்ள சிவில் வழக்குகள் விசாரணை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடக்கிறது.
இதனால் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் இட வசதி இல்லாமல் அதிக வழக்குகள் விசாரிப்பதால் வழக்குகள் தேக்கமாகிறது.
ஆகையால் 5 ஆண்டுகளாக ராமேஸ்வரத்தில் கட்டப்படும் புதிய நீதிமன்ற கட்டடத்தை விரைவாக திறக்கவும், இந்த வளாகத்தில் சிவில் நீதிமன்றம் துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.