/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்: ஊராட்சி செயலர்கள் கூடுதல் தலைமை செயலரிடம் முறையீடு

ADDED : செப் 13, 2025 03:41 AM
பெருநாழி: ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடிப்படை உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் உள்ள கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடியிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் மற்றும் ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட தலைவர் பெருநாழி முருகன் ஆகியோர் கூறியதாவது:
ஊராட்சி செயலாளர்களுக்கு பணி ஓய்வு பெற்றவுடன் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2000 மட்டுமே வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல. பதிவறை எழுத்தருக்கு இணையான காலம் முறை ஊதியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் கொண்டுவந்து பணி ஓய்வு பெறும் போது ஓய்வூதிய பலன்கள் வழங்குவதுடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளர் பதவி உயர்வு பெற்று பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஊராட்சி செயலாளராக பணியாற்றிய காலத்தையும் ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஊதியம், பணியாளர்களுக்கு பலனளிக்காத திட்டம் ஆகும்.
எனவே அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை வழங்க ஓய்வூதியக்குழு தலைவர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து முறையிட்டுள்ளோம் என்றனர்.