/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி புறவழிச்சாலையில் 10 நாட்கள் கூட தாங்காத எச்சரிக்கை மின்விளக்கு
/
கமுதி புறவழிச்சாலையில் 10 நாட்கள் கூட தாங்காத எச்சரிக்கை மின்விளக்கு
கமுதி புறவழிச்சாலையில் 10 நாட்கள் கூட தாங்காத எச்சரிக்கை மின்விளக்கு
கமுதி புறவழிச்சாலையில் 10 நாட்கள் கூட தாங்காத எச்சரிக்கை மின்விளக்கு
ADDED : ஏப் 24, 2025 06:45 AM

கமுதி: கமுதி அரண்மனை மேடு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் விபத்தை குறைக்கும் வகையில் 10 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட எச்சரிக்கை மின்விளக்கு மழையில் சேதமடைந்தது.
கமுதி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்துார் கமுதி ரோடு கோட்டைமேடு அருகே துவங்கி பார்த்திபனுார் - அருப்புக்கோட்டை ரோட்டில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 18 மாதங்களாக நடைபெற்று முடிந்தது. ரோட்டில் எச்சரிக்கை பலகை இல்லாததால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு புதிதாக எச்சரிக்கை பலகை, மின்விளக்கு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. இதில் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மின்விளக்கு கீழே விழுந்து சேதமடைந்தது.
புதிதாக அமைக்கப்பட்டு 10 நாட்கள் கூட தாங்காத மின்விளக்கால் அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.