/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளியுடன் கனமழை எச்சரிக்கை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
/
சூறாவளியுடன் கனமழை எச்சரிக்கை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
சூறாவளியுடன் கனமழை எச்சரிக்கை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
சூறாவளியுடன் கனமழை எச்சரிக்கை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ADDED : அக் 16, 2024 02:14 AM

ராமேஸ்வரம்:வங்கக் கடலில் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கையால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சூறாவளி வீசி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலை எழும்.
இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன், மண்டபம் தென் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்தனர்.
மேலும் இன்று ராமேஸ்வரம், மண்டபம் வடக்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்ததால் 2000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.